Wednesday, August 5, 2026
34 °c
Tiruvannamalai
30 ° Thu
29 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
28/12/2023
in செய்திகள்
0
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நூற்றாண்டு விழா மலரையும், கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலையும் வெளியிடுகின்றனர்.

கேரள மாநிலம் வைக்கம் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 1924ஆம் ஆண்டு அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தடைபடும் நிலையில் இருந்த சூழ்நிலையில் இப்போராட்டத்துக்கு உயிர் கொடுக்குமாறு பெரியாருக்கு, கேரள போராட்ட தலைவர்கள் கடிதம் எழுதினர். இதை ஏற்று, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற பெரியார், வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.

AlsoRead

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். மக்கள் திரண்டு ஆதரவு அளித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. பெரியார் 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, திருவாங்கூர் மன்னர் காலமானதால், அனைவரையும் அரசு விடுதலை செய்தது. பெரியாருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. தந்தை பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்ததால், ‘வைக்கம் வீரர்’ என்று போற்றப்பட்டார்.

சாதி காரணமாக நிலவிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க நடைபெற்ற முதல் போராட்டம் வைக்கம் போராட்டம். எனவே, இந்த போராட்ட வெற்றியின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் சட்டப் பேரவையில் சில அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா இன்று காலை 11.15 மணி அளவில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலரை வெளியிட்டு பேசுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று பெரியாரும் வைக்கம் போராட்டமும்’ என்ற நூலை வெளியிடுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். வைக்கம் போராட்டம் குறித்து தமிழக செய்தித் துறை தயாரித்துள்ள ஆவணப்படம் விழாவில் திரையிடப்படுகிறது.பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவ கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags: கேரள மாநிலம்நூற்றாண்டு விழாவைக்கம் போராட்டம்
Previous Post

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Next Post

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Related Posts

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

05/08/2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

03/08/2026

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்: விவசாயிகளின் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்

03/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்
  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved