Saturday, August 8, 2026
27 °c
Tiruvannamalai
31 ° Sun
31 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/01/2024
in இந்தியா, செய்திகள்
0
பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்

இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்தது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத் தீவுக்கு சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு எழில்மிக்க கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அத்துடன், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் கடலுக்கடியில் நீந்தும் சாசகத்தையும் முயற்சி செய்தார்.

இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர், அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்து பரலவாக முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலும், இன வாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டனர்.

சீன ஆதரவு நிலைப்பாடு உடையவராக அறியப்படும் மூயிஸ் கடந்த நவம்பரில் மாலத்தீவு அதிபரான பிறகு இந்தியா – மாலத்தீவு இடையிலான உறவுகளில் சுமுகத்தன்மை இல்லாத நிலை நிலவுகிறது. இச்சூழலில் இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மாலேயில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டு அரசிடம் எதிர்ப்பை பதிவு செய்தது.

AlsoRead

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

மாலத்தீவின் விளக்கமும், நடவடிக்கையும்

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மாலத்தீவு அரசு, சம்பந்தப்பட்ட கருத்துகள் தனிப்பட்டவை; அவை அரசின் கருத்துகள் அல்ல. கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பொறுப்பான வழிமுறையில் பயன்படுத் தப்பட வேண்டும் என்பதில் மாலத்தீவு அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

மாலத்தீவு மற்றும் அதன் சர்வதேச கூட்டுறவு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையிலோ, வெறுப்புணர்வு மற்றும் எதிர்மறையைப் பரப்பும் வகையிலோ கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அது போன்ற அவமதிப்பான கருத்துகளை வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளுக்காக, இளைஞர் நலத்துறை இணையமைச்சர்கள் மால்ஷா ஷரீஃப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஜூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: 3 பேர் இடைநீக்கம்அமைச்சர்பிரதமர் மோடிமாலத்தீவு
Previous Post

ராசி பலன்கள்

Next Post

300 கிலோ எடையுள்ள ராட்சத மீன்

Related Posts

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

08/08/2026
“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

08/08/2026

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

08/08/2026

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

08/08/2026

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

08/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:
  • “அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”
  • தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”
  • தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:
  • காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved