சிறை கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் தண்டனை கைதி கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமாரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும், அப்போது அவர் திருட்டில் ஈடுபட்டதாக சிறையில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, எஸ்பி. அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன் ஆகிய மூன்று பேரை சிறைத் துறை டிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.