Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்: தமிழக அரசு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
24/10/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்: தமிழக அரசு!

கூட்டுறவு நிறுவனங்களில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கூட்டுறவு சங்கத்தால் செயல்படுத்தப்படும் ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கும் சேவைகள் அனைத்தும் வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். ஒரு கணக்குக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சேமிப்பு, நிரந்தர வைப்பு, கடன் திட்டங்கள் குறித்த கையேடுகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் நடவடிக்கை ரேஷன் கடைகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் வங்கி சேவைகளை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு மத்திய கால வேளாண் கடன், பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், உரக்கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் தொடங்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

நியாய விலைக் கடைகள் மூலம் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே இந்த கூட்டுறவு சங்கங்களில் அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய வங்கி திட்டங்களை வகுத்து இளைஞர்களை கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி இது போன்ற வங்கி சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags: கூட்டுறவுகூட்டுறவு வங்கிதமிழ்நாடு அரசுவங்கி
Previous Post

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

Next Post

இடிந்து விழும் நிலையில் சுகாதார நிலையம்!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved