Monday, September 7, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Tue
32 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!

 குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்தன. அவற்றை வருவாய் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனிடையே குன்னூர் ஆப்பில் பீ அருகே உள்ள ஜாய்ஸ் பில்டிங் பகுதியில் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதே போன்று பெட்போர்ட் பகுதியில் புதிதாக குடியிருப்பு கட்ட தடுப்பு சுவர் உயரமாக எழுப்பப்பட்டு வந்த நிலையில் கன மழை காரணமாக அதன் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்திற்கு முறையாக நகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது. தடுப்புச் சுவர் இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Tags: குன்னூர்நீலகிரிமண்சரிவு
Previous Post

மீண்டும் மீண்டுமா? திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்

Next Post

2024 அக்டோபரில் 90.83 லட்சம் பேர் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம்!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved