Friday, July 24, 2026
23 °c
Columbus
22 ° Sat
24 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
11/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார்.  

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

மாணவர்களின் கலைதிறன்களை வெளிக்கொணரும் விதமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் மற்றும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகளில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு வரை 5 போட்டிகள், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 8 போட்டிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 11 போட்டிகள், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை 30 போட்டிகள்,  11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை 30 போட்டிகள் என கவின் கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை தோற்கருவி, கருவி இசை துளை காற்றுக் கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள், நடனம், நாடகம் உட்பட மொத்தம் 84 வகையான போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக 3,19,452 மாணவ,மாணவிகள் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, பள்ளி அளவில் 58,303 மாணவ,மாணவிகள் தேர்வு பெற்றனர். குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 8,589 மாணவ,மாணவிகள் தேர்வு பெற்றனர். தற்போது மாவட்ட அளவில் 2,863 மாணவ,மாணவிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாணவ,மாணவிகள் தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி வெற்றிபெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு  முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆ.எல்லப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் சிங்காரவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.கே.நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: கடலூர்கடலூர் மாவட்டம்
Previous Post

வேலூர் கோயில் உண்டியல் உடைப்பு திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

Next Post

12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved