Saturday, May 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

59 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் பங்கேற்கும் காங்கிரஸ்!

Balaji by Balaji
22/05/2026
in தமிழ்நாடு
0
Tamil Nadu Cabinet Expansion

Tamil Nadu Cabinet Expansion

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவை நேற்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்ட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதன் மூலம், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி நேரடியாகப் பங்கேற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

கூட்டணி ஆட்சியின் பின்னணி

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சிக்கட்டிலை எட்டத் தேவையான 118 இடங்களுக்காக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது.

இதையடுத்து, கடந்த 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் முதற்கட்டமாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை பெரும்பான்மை வாக்கெடுப்பில், அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முறைப்படி பலத்தை நிரூபித்தது.

இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்று இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழா நடைபெற்றது.

AlsoRead

முதல்வர் விஜய் பற்றி அவதூறு? ஓடும் ரயிலை நிறுத்தி பயணிகள் மீது கல்வீச்சு – ஆரணி அருகே பரபரப்பு!

“அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது” கட்சி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!

ஆட்சியில் அதிகாரம் பெற்ற கூட்டணிக் கட்சிகள்; வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சர்களாக பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா

நேற்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகை புதிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டது. காலை 10 மணிக்கு வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களின் பட்டியல்:

ஸ்ரீநாத், கமலி.எஸ், சி.விஜயலட்சுமி, ஆர்.வி.ரஞ்சித்குமார், வினோத், ராஜீவ், பி.ராஜ்குமார், வி.காந்திராஜ், மதன் ராஜா.பி, ஜெகதீஸ்வரி.கே, ராஜேஷ்குமார்.எஸ் (காங்கிரஸ்), எம்.விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி, விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ, ரமேஷ், பி.விஸ்வநாதன் (காங்கிரஸ்), குமார்.ஆர், தென்னரசு.கே, வி.சம்பத்குமார், முகமது பர்வேஸ், டி.சரத்குமார், என்.மரிய வில்சன் மற்றும் விக்னேஷ்.கே.

விழா முடிவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர், தலைமைச் செயலர் சாய்குமார், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருமாவளவன் (விசிக), மு.வீரபாண்டியன் (இகம்), பெ.சண்மகம் (மாகம்) உள்ளிட்ட முக்கியப் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையன் இலாகா மாற்றம்; புதிய நிதியமைச்சர்!

அமைச்சரவை விரிவாக்கத்தோடு சில முக்கிய அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

  • கே.ஏ.செங்கோட்டையன்: இவருக்கு நிதித்துறைக்கு பதிலாக, வருவாய்த்துறை மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • என்.மரிய வில்சன்: புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள இவருக்கு மிக முக்கியத்துவமிக்க நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  • முதல்வர் விஜய்: இவரது வசம் இருந்த பெண்கள் நலன் துறைக்கு பதில் சிறப்பு முயற்சிகள் துறையும், அமைச்சர் ஆனந்த் வசம் இருந்த வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத் துறைகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இன்று விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் பதவியேற்பு

அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்ற முதல்வரின் விருப்பத்திற்கேற்ப, ஐயூஎம்எல் சார்பில் ஷாஜகானும், விசிக சார்பில் வன்னி அரசும் இன்று (மே 23) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

Tamil Nadu Cabinet Expansion
Tamil Nadu Cabinet Expansion

தமிழக அமைச்சர்களின் முழுமையான இலாகாக்கள் பட்டியல்:

அமைச்சர்ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் (Portfolios)
முதல்வர் விஜய்பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், இளைஞர் நலன், குழந்தைகள், மூத்தோர், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.
என்.ஆனந்த்ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், பாசனத்திட்டங்கள்.
சி.டி.ஆர்.நிர்மல்குமார்மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள், பாஸ்போர்ட்.
கே.ஏ.செங்கோட்டையன்வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புகள், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம், சட்டப்பேரவை.
ஆதவ் அர்ஜுனாபொதுப்பணி, நெடுஞ்சாலை, விளையாட்டு.
கே.ஜி.அருண்ராஜ்சுகாதாரம்.
பி.வெங்கடரமணன்உணவு.
ராஜ்மோகன்பள்ளிக்கல்வி, செய்தி.
டி.கே.பிரபுஇயற்கை வளங்கள்.
எஸ்.கீர்த்தனாதொழில் துறை.
ஸ்ரீநாத்மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம்.
கமலி.எஸ்கால்நடைத் துறை.
சி.விஜயலட்சுமிபால்வளம்.
ஆர்.வி.ரஞ்சித்குமார்வனம்.
வினோத்வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரை, பயன்பாடற்ற நில மேம்பாடு.
ராஜீவ்சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்.
பி.ராஜ்குமார்வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிஎம்டிஏ, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
வி.காந்திராஜ்கூட்டுறவு.
மதன்ராஜா.பிகுறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை (MSME).
ஜெகதீஷ்வரி.கேசமூக நலம், பெண்கள் அதிகாரம்.
ராஜேஷ்குமார்.எஸ்சுற்றுலா.
எம்.விஜய் பாலாஜிகைத்தறி, துணிநூல், காதி.
لوகேஷ் தமிழ்ச்செல்வன்.டிவணிகவரி, பதிவு.
விஜய் தமிழன் பார்த்திபன்.ஏபோக்குவரத்து.
ரமேஷ்இந்து சமய அறநிலையங்கள்.
பி.விஸ்வநாதன்உயர்கல்வி.
குமார்.ஆர்செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள்.
தென்னரசு.கேவெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்.
வி.சம்பத்குமார்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன்.
முகமத் பர்வேஸ்தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு.
டி.சரத்குமார்மனித வள மேலாண்மை.
என்.மரியவில்சன்நிதி, ஓய்வூதியம், திட்டம், வளர்ச்சி.
விக்னேஷ்.கேமதுவிலக்கு, ஆயத்தீர்வை.
Tags: Alliance Government Tamil NaduCM VijayCongress in TN CabinetGovernor RV ArlekarSengottaiyan Portfolio ChangeTamil Nadu Cabinet ExpansionTamil Nadu Ministers List 2026TVK Government
Previous Post

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

Next Post

ஆட்சியில் அதிகாரம் பெற்ற கூட்டணிக் கட்சிகள்; வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சர்களாக பதவியேற்பு

Related Posts

Vijay Fan Arrest

முதல்வர் விஜய் பற்றி அவதூறு? ஓடும் ரயிலை நிறுத்தி பயணிகள் மீது கல்வீச்சு – ஆரணி அருகே பரபரப்பு!

22/05/2026
Tamizhaga Vettri Kazhagam, N Anand

“அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது” கட்சி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!

22/05/2026

ஆட்சியில் அதிகாரம் பெற்ற கூட்டணிக் கட்சிகள்; வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சர்களாக பதவியேற்பு

22/05/2026

கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதாக தகவல்;

09/05/2026

பெரும்பான்மை உறுதியாகாத நிலையிலும் விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை

09/05/2026

புதிய ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

09/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் விஜய் பற்றி அவதூறு? ஓடும் ரயிலை நிறுத்தி பயணிகள் மீது கல்வீச்சு – ஆரணி அருகே பரபரப்பு!
  • “அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது” கட்சி நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு!
  • ஆட்சியில் அதிகாரம் பெற்ற கூட்டணிக் கட்சிகள்; வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சர்களாக பதவியேற்பு
  • தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
  • ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved