Monday, September 28, 2026
28 °c
Tiruvannamalai
28 ° Tue
28 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

-சீமான் கண்டனம்

admin by admin
13/08/2026
in தமிழ்நாடு
0
அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நட்பையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, அது ஒரு உயிரைப் பறிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அமுதனை இழந்து பெருந்துயரத்தில் வாடும் அவரது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அமுதன் செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்கள் பெறப்பட்டதாகவும், அதன்பிறகு ஏறக்குறைய 20 மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் பெற்றோரின் குற்றச்சாட்டை வலுப்படுத்துகின்றன.

அப்படியிருக்கையில், போதைப்பொருள் புழக்கம் என்ற முக்கிய காரணத்தை மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என்ற கோணத்தில் வழக்கை மாற்ற முயல்வது அநீதிக்குத் துணைபோகும் செயலாகும். மேலும், இதை ‘குழு மோதல்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 20 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கிக் கொல்வதை ‘குழு மோதல்’ என்று கூறுவது எப்படி நியாயமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பரப்புரைக் கூட்டங்களில் தன்னை ‘தாய் மாமன்’ என்று கூறிக்கொள்ளும் முதல்வர் விஜய், 19 வயது மாணவர் அமுதனின் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன நீதியை வழங்கப் போகிறார்? நடந்த சம்பவங்களை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகமும், போதைப்பொருள் தொடர்பில்லை என கூறும் ஆளும் அரசின் போக்கும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

எனவே, மாணவர் அமுதன் கொலை வழக்கில் நீதிவிசாரணை நடத்தி, தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Tags: அமுதன் கொலைகுழு மோதல்சீமான் கண்டனம்போதைப்பொருள்
Previous Post

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

Next Post

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved