Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தனிக்கட்சி தொடங்க மாட்டேன்-ஓபிஎஸ்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
27/12/2023
in செய்திகள், தமிழ்நாடு
0
தனிக்கட்சி தொடங்க மாட்டேன்-ஓபிஎஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அதிமுக ஆட்சியின் ரகசியங்களை நான் வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

AlsoRead

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இயக்க ஆலோசனைக் கூட்டம் கோவை சூலூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பழனிசாமி முதல்வராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அப்போது நான் கையெழுத்திட்டுதான் கோப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செல்லும், நான் அந்த ரகசியங்களை வெளியில் சொன்னால், பழனிசாமி திஹார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

தனிக்கட்சி தொடங்குமாறு எனது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் நான் கடமையாற்றுவேனே தவிர, எந்த நாளும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜகவுடன் எங்கள் உறவு சீராக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி சிறந்த ஆட்சியைக் கொடுத்திருக்கிறார். எனவே, மீண்டும் அவர் பிரதமராக வந்தால், நாடு சிறப்பாக இருக்கும். இதுதான் வரும் மக்களவைத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு. அரசியல் ரீதியாக பழனிசாமி இனி முன்னேறவே முடியாது.

அதிமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்தன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கோடநாடு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தண்டிப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த விவகாரத்தில் 6 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில அரசியல் ரகசியங்கள் உள்ளன. அவற்றை வெளியில் சொல்ல முடியுமா?” என்று சூசகமாக பேட்டியளித்தார்.

Tags: அதிமுகஓ.பன்னீர்செல்வம்கோடநாடுதனிக்கட்சிமுதல்வர் ஸ்டாலின்
Previous Post

காவலர் குடியிருப்புகள் அமைக்க இடம் தேர்வு

Next Post

பாஜகவுடன் கூட்டணி இல்லை இ.பி.எஸ் திட்டவட்டம்

Related Posts

mkstalin

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026
Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved