Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் மாவட்ட தொழில்துறைகளின் வளர்ச்சி மேம்பாடு ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

admin by admin
27/07/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் மாவட்ட தொழில்துறைகளின் வளர்ச்சி மேம்பாடு ஆலோசனை கூட்டம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம்  சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :

முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமெனவும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து இளைஞர்களும் வேலைவாய்ப்பை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்பதற்காகவும், பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

AlsoRead

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனத்தின் சென்னை மண்டல தலைவர், துணைத்தலைவர் மற்றும் குழுத்தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேளாண்மையை முதன்மையாக கொண்ட ஊரக பகுதிகள் நிறைந்த மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் பட்டய மற்றும் பட்டப்படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வாறு கல்வி நிறுவனங்களில் பயின்ற இளைஞர்களுக்கு இந்த பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும். மேலும், வேளாண் தொடர்பான தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் அமைக்கும் பட்சத்தில் பின்தங்கியுள்ள இப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம்  சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு திட்டங்கள் மூலமாக வங்கி கடனுதவிகள் வழங்கும் அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், சிட்கோ, டிக், மாவட்ட முன்னோடி வங்கி, தாட்கோ மற்றும் மின் வாரியம், சிப்காட் உள்ளிட்ட அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் லோட்டே இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை மண்டல நிர்வாக இயக்குநர் மிலன் வாஹி, சி.ஐ.ஐ. துணைத் தலைவர் அஜித் சோர்டியா, எம்எஸ்எம்இ குழுத்தலைவர் ஆர்.வி.சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Previous Post

புதுப்பாளையம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

Next Post

திருவண்ணாமலை கிரிவல பாதையில் குளங்கள் மற்றும் மலை அடிவார ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு

Related Posts

mkstalin

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026
Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved