Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

admin by admin
15/08/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருவளாகத்தில் புதிய அலுவலக கட்டிடம் வழங்க உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருவளாகத்தில் உள்ள மாவட்ட அலுவலக புதிய கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் சாதாரண குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சீ.பார்வதிசீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பா.பாரதிராமஜெயம் முன்னிலை வகிக்க, மாவட்ட ஊராட்சி செயலர் ஜி.ரவிசந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டிலிருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை மாற்றி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருவளாகத்தில் அமைவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்ப்புதல்வன் திட்டம் தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் படிப்பு தொடர்பான அனைத்து வகையான பொருட்களையும் வாங்கி தங்கள் படிப்பை முடிக்கவும் வழிவகை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்ட ஊராட்சி நிதியில் எஸ்எப்சி பணிகளுக்கு கடந்த ஜூன் மாதம் ரூ.1.26 கோடியும் ஜூலை மாதம் ரூ.1.19 கோடியும் செலவினம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மாவட்ட ஊராட்சிக்கான மாநில நிதிக்குழு மானியம் (எஸ்எப்சி) 2024-25ம் ஆண்டுக்கு 2வது கட்டமாக பணிபட்டியல் தேர்வு செய்ய மன்றத்தின் ஒப்புதல் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதான நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஞானசௌந்தரி மாரிமுத்து, கே.சாந்தி கண்ணன், எஸ்.முத்து, என்.சுஜாதா டி.பூங்கொடி, அ.கோவிந்தராசன், கே.ஆர்.தவமணி, கே.அரவிந்தன், கஸ்தூரி, ஆர்.சகாதேவன் பி.முத்துமாறன் மற்றும்  மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ஏ.மிருணாளினி நன்றி கூறினார்.

Tags: திருவண்ணாமலை
Previous Post

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Next Post

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved