Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? அடுத்த கவர்னர் யார்?

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in தமிழ்நாடு
0
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? அடுத்த கவர்னர் யார்?

தமிழக கவர்னர் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல்

0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீட்டித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்ட பிறகு மோதல் தொடங்கியது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதேபோன்று ஆளுநர் ரவியும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுவது. பட்டமளிப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என அரசியல் கட்சிகளால் குற்றச்சாட்டிற்கு ஆளானார்.

அடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழ் தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை தமிழகம் என மாற்ற முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட கண்டனங்களை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.

தமிழக முதலமைச்சரை விட தனக்கே அதிகாரம் இருப்பது போல் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியும் உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது முடிவை வாபஸ் வாங்கினார். இது போன்று பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரரான ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைந்தும் தொடர்ந்து நீடித்து வந்தார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என காட்டாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhஅருணை தமிழ் செய்திகள்ஆளுநர் ரவிஇன்றைய செய்திகள்செய்திகள்தமிழ் செய்திகள்தமிழ் நாடுதமிழ்நாடுமுக்கிய செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு!

Next Post

விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved