Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

BSNL 5G எந்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்?

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in தொழில்நுட்பம்
0
BSNL 5G எந்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்?

BSNL நிறுவனம் வரும் ஜூன், 2025 காலவறைக்குள் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தும்

0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவையின் பலனை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய தகவல் இந்திய மக்களை குஷியடைய செய்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் 5ஜி சேவைக்கான தொடக்க தேதியை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இதனால், பிஎஸ்என்எல் 5ஜி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்குமென்ற உறுதியான காலம் இப்போது தெரியவந்துள்ளது.

AlsoRead

பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

ஜிப்லி போட்டோவில் குற்ற அபாயம்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

அக்டோபர் 14 திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ​​பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மொபைல் டவர்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் கூறிய தகவலின் படி, BSNL நிறுவனம் வரும் ஜூன், 2025 காலவறைக்குள் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். யுஎஸ்-இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றம் ITUWTSA நிகழ்வில் பேசிய அவர், 4G-யில் உலகத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தியாவும் முன்னேறி வருவதாக கூறினார். அதேபோல், 5G இல் இந்தியா உலகளாவிய முன்னேற்றங்களை கண்டுள்ளது என்று கூறினார்.

எதிர்கால திட்டங்களில், மற்ற நாடுகளை விட வேகமாக இந்தியா அதன் 6G நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வேறு எந்த மூலத்திலிருந்தும் உபகரணங்களைப் பயன்படுத்தாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவான உத்தரவை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சிந்தியா எடுத்துரைத்தார்.

வெற்றிகரமாக, இந்தியாவில் 1 லட்சம் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நிறுவப்பட்ட வேகத்தில், பிஎஸ்என்எல் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளார். இது ஜூன் 2025க்குள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு 4ஜி இல் இருந்து அதே டவரில் 5ஜி வழங்கும் உலகின் ஆறாவது நாடாக நாம் இருப்போம் என்றும் அவர் கலந்தாய்வில் தெரிவித்திருக்கிரார்.

Tags: arunai tamilarunai tamil paperarunai thamizharunaitamizhBSNLBSNL 5GBSNL Newstamil newstech News Tamiltech Tamil
Previous Post

விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?

Next Post

மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு 

Related Posts

Quantum Battery

பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

06/04/2026
விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

19/03/2026

ஜிப்லி போட்டோவில் குற்ற அபாயம்.. சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

09/04/2025

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

12/02/2025

இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

31/01/2025

‘பிளாக் ஹோல் டிரிபிள்’ அமைப்பு கண்டுபிடிப்பு!

04/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved