Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் உள்ளனர்.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

AlsoRead

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி முன்னிலையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர், சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

அந்தவகையில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வுகாண ஏதுவாக நேற்றைய தினம் சேலம் மாவட்டம், கொளத்தூரிலும், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.  சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் மூலம் சங்ககிரியில் 449 மனுக்களும், எடப்பாடியில் 1,396 மனுக்களும், கொங்கணாபுரத்தில் 309 மனுக்களும், மகுடஞ்சாவடியில் 319 மனுக்களும், இடங்கணசாலையில் 423 மனுக்களும் என மொத்தம் 2,896 மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்முகாம்களில் அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு தகுதியான அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.  குறிப்பாக, இலவச வீட்டுமனைப் பட்டாவானது நத்தம் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கி வருகிறோம். 

அதேபோன்று ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இம்முகாமில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: சேலம்மாவட்ட ஆட்சியர்
Previous Post

அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்ட வேண்டும்:துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !

Next Post

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

Related Posts

Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026
Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved