Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வீடு,மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு: ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும்! TNRERA

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/11/2024
in வர்த்தகம்
0
வீடு,மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு: ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும்! TNRERA
0
SHARES
156
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகள் விற்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு தலா ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய உத்தரவு போட்டுள்ளது.

AlsoRead

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்: வீட்டு வாடகை சலுகையில் (HRA) முக்கிய மாற்றங்கள்!

 ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5381 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவி‌ல் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை ஆணயத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், ரியல் எஸ்டேட்  புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. புதிய உத்தரவு படி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது அதுவும் ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 3 லட்சம் ரூபாய் வரை என பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான நடைமுறைகளை மாற்ற ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் திருப்பூர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா ரூ. 12,000 அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, ரூ10,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் நகராட்சிகளில் வீடு, மனை விற்றால் தலா, ரூ. 6,000, பேரூராட்சிகளில் தலா ரூ. 4,000, ஊராட்சிகளில் தலா, ரூ.3,000 என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் துறையின் வெப்சைட்டுக்கு சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளலாம்.அபராதத்தொகை விதிக்கும் போது மனைப்பிரிவு திட்டங்களின் அதன் மொத்த மதிப்பி‌ல் 2% அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அதில் விற்கப்பட்ட வீடு மதிப்பில் 1% என இரண்டில் எது அதிகம் என்ற அடிப்படையில் அபராதத்தொகை முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags: TNRERAதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்வர்த்தகம்
Previous Post

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

Next Post

திருச்செந்தூர் கோயில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை!

Related Posts

Gold Price Today

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

06/04/2026
Indian Stock Market - Representative image (Freepik)

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

23/03/2026

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்: வீட்டு வாடகை சலுகையில் (HRA) முக்கிய மாற்றங்கள்!

22/03/2026

தங்கம் விலையில் அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹2,640 குறைந்தது!

21/03/2026

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.10 லட்சம் கோடி இழப்பு – சென்செக்ஸ், நிஃப்டி நிலைகுலைந்தது ஏன்?

13/03/2026

‘இதயம்’ குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

04/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved