Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடக்கம்

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

admin by admin
11/12/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடக்கம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அடுத்த சேகூடலூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலில் 200 சட்டசபை தொகுதிகள் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வீயுகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டு சாவடிகளிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தண்டராம்பட்டு அடுத்த சே. கூடலூர் கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரச்சாரத்தை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தனது சொந்த ஓட்டு சாவடி பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் அமைச்சர் எ.வ.வேலு பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசியதாவது சே. கூடலூர் பஞ்சாயத்தில் இரண்டு ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் 249 ஓட்டு சாவடி அதிகமான ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காகவே பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 249 ஓட்டு சாவடி மையம் அதிகமான ஓட்டுகள் தான் வாங்கியுள்ளோம். இதுவரை குறைந்த ஓட்டுகள் வாங்கியதை இல்லை. வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிகமான ஓட்டு வேண்டுமென்றால் மக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிக்கை நாளிதழ்கள் தமிழக முதல்வரை பாராட்டுகின்றன. மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறார்.

இந்தியாவிலேயே காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் முதல் முதலில் துவங்கப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களில் வெளிநாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் விநியோகம். தமிழகத்தில் விடுபட்ட குடும்ப அட்டைகாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வருகின்ற 12 ம் தேதி வழங்கப்படுகிறது.

மீண்டும் 2026-ல் தமிழக முதல்வராக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். கடந்த முறை சட்டசபை தேர்தலில் வாங்கிய ஓட்டு, லோக்சபா தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட வருகின்ற சட்டசபை தேர்தலில் 249 அதிகமான ஓட்டுகளை வாங்க வேண்டும்.

இந்த பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து பூக்களில் தொடர்ந்து தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 10 பஞ்சாயத்துக்களிலும் நடைபெறும்.

திருவண்ணாமலை மாநகராட்சி, யூனியன் இதைவிட தண்டராம்பட்டு யூனியனில் உள்ள 10 கிராம பஞ்சாயத்துக்கள் திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் உள்ளது.
எந்தத் தேர்தலிலும் திருவண்ணாமலை நகரத்தை விட தண்டராம்பட்டு யூனியனில் உள்ள இந்த 10 கிராம பஞ்சாயத்தில் தான் அதிக ஓட்டுகள் திமுகவிற்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டசபை தேர்தலிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன், செல்வ நராயணன் மற்றும் பூத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுஎன் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடிதிருவண்ணாமலை
Previous Post

கலசப்பாக்கத்தில் பரப்புரையை தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் தொடங்கினார்

Next Post

கீழ்பென்னாத்தூரில் ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved