Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தனிச்சின்னத்தில் போட்டி: முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ அறிவிப்பு!

Balaji by Balaji
28/02/2026
in தமிழ்நாடு
0
MDMK Alliance - Vaiko

ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டி - வைகோ

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு மற்றும் முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய கோரிக்கைகள்

முதல்வருடனான சந்திப்பின் போது மூன்று முக்கிய கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தினார்:

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

  • காயிதே மில்லத் பல்கலைக்கழகம்: காயிதே மில்லத் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

  • சூரிய சக்தி மின்சாரம்: விவசாயிகளுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட வைகோ, அதற்கு மாற்றாக சூரிய சக்தி மூலம் இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்தார். இதையும் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

  • கட்டபொம்மன் சத்திரம் விவகாரம்: திருப்பரங்குன்றம் கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்குச் சொந்தமான சத்திரம் தொடர்பான புகாரை முதல்வர் கவனித்து, அமைச்சர் சேகர்பாபு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தனிச்சின்னம் மற்றும் தொகுதிப் பங்கீடு

தொகுதிப் பங்கீடு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வைகோ:

“தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட அழைப்பு வந்தவுடன் பேச்சுவார்த்தை தொடரும். எங்களைப் பொறுத்தவரை, மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என எங்கள் அவைத்தலைவர் ஏற்கனவே கூறியுள்ளார். அதுவே எங்களின் உறுதியான நிலைப்பாடு,” என்று தெரிவித்தார்.

பாஜக குறித்த விமர்சனம்

தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “பிரதமர் மோடி எத்தனை முறை காவடி தூக்கினாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. தமிழக மக்களை பாஜகவால் ஒருபோதும் ஏமாற்ற முடியாது” என்று சாடினார்.

Tags: Anna ArivalayamBJP vs MDMKCM MK StalinDMK Election ManifestoMDMKMDMK AllianceSeparate SymbolTamil Nadu ElectionsVaikoVeerapandiya Kattabomman Chathiram
Previous Post

அபுதாபி மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: ஐக்கிய அரபு அமீரகம் கடும் எச்சரிக்கை!

Next Post

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved