Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in மாவட்டங்கள்
0
அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

கடலூர் எம்.பி வேண்டுகோள்

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம். கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது:

மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும். 

மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 

கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து மேம்படுத்துதல், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்கான திட்டம், கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை குறைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட. திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்ற மேற்கொள்வதற்காக துாய்மைபாரத மேற்கொள்ளப்படுகின்றன. 

இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் இந்தியாவிலேயே தமிழகம் தலை சிறந்த மாநிலமாக திகழும் வகையில் அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகவும், திட்டங்களின் பயன் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

அதனடிப்படையில் மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர்  சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் பா.தாமரைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர்.ம.இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) /திட்ட இயக்குநர்  இரா.சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அணு, சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhகடலூர்கடலூர் மாவட்டம்
Previous Post

ராஜவிருந்து கூட கூகுள் நிறுவனத்திற்கு லாபம் தான்!

Next Post

திருப்பத்தூரில் தீஷா ஆய்வு குழு கூட்டம்:சி.என்.அண்ணாதுரை பங்கேற்பு!

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved