Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பணிகள்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
29/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பணிகள்!

திருவண்ணாமலையில் ₹58.19 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

0
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலையில் ₹58.19 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளி பயன்பாட்டுக்கு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள், மருத்துவம், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வியில் சேர வேண்டும் என்ற நோக்கத்திற்குகாக, மாவட்டந்தோறும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளை அரசு உருவாக்கி வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை சண்முகா அரசு தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 346 மாணவ- மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு போதுமான கட்டிட வசதியும், விடுதி வசதியும் இல்லை. அதனால், கூடுதல் மாணவர்களை சேர்க்க இயலாத நிலை இருக்கிறது. எனவே, திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளிக்கு விடுதிகளுடன் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நபார்டு நிதியுதவியுடன் ₹58.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சியில் அரசு மாதிரி பள்ளி கட்டுவதற்கான கட்டுமான பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, தற்போது அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிகளுக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை புதிய ரிங்ரோடு பகுதியையொட்டி அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளி கட்டிடம் 52,675 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. பள்ளி வகுப்பறைகள் தரைதளம் மற்றும் 2 அடுக்குகளும், விடுதி கட்டிடம் தரை தளம் மற்றும் 4 அடுக்குகளும் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. அதில், 22 வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகங்கள், நூலகம், கணினி அறை, அலுவலகம், கூட்ட அரங்கம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள்

மேலும், மாணவர் விடுதியில் 400 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் 73,171 சதுர அடி பரப்பளவில் மாணவர் விடுதியும், 400 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் 73,171 சதுர அடி பரப்பளவில் மாணவிகள் விடுதியும் உள்பட மொத்தம் 1.99 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அதேபோல், மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் தலா 63 அறைகள், வரவேற்பு அறை, விடுதி காப்பாளர் அறை, பொது அறை, நூலகம், மின் அறை, மின்தூக்கி(லிப்ட் வசதி), சமயலறை, சலவை அறை, சமையற்கூடம், சேமிப்பு அறை, குளியலறை மற்றும் கழிப்பறைகள் அமைகின்றன.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

திருவண்ணாமலையில் பிரமாண்டமாக அமையும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரும் 2024-2025ம் கல்வி ஆண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், திருவண்ணாமலையில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில், கடந்த ஆண்டு மட்டும் 49 மாணவர்கள், மருத்துவம், ஐஐடி நிறுவனத்தில் பொறியியல் கல்வி உள்ள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். எனவே, புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால், மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை: தமிழ்நாடு அரசு!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved