Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“இந்தியா – இஸ்ரேல் இடையிலான உறவு அனைத்துத் துறைகளிலும் வலுப்பெறும்” – பிரதமர் நரேந்திர மோடி

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

Balaji by Balaji
26/02/2026
in உலகம்
0
PM Modi Israel Visit

PM Modi Israel Visit

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெல் அவிவ்: “பயங்கரவாதம் என்பது உலக அமைதிக்கு எதிரானது; அதை எதனாலும் நியாயப்படுத்த முடியாது” என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (Knesset) ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

AlsoRead

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடியை, டெல் அவிவ் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வந்து கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். இரு நாட்டுத் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு (நெசெட்) பிரதமர் மோடி வருகை தந்தபோது, அங்கிருந்த எம்.பி.க்கள் அனைவரும் “மோடி… மோடி…” என முழக்கமிட்டு அவருக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய அரசியல் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இதன் மூலம் பெற்றுள்ளார்.

PM Modi Israel Visit
PM Modi Israel Visit

“இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு” – பிரதமர் நெதன்யாகு பாராட்டு

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவை “சிறந்த நட்பு நாடு” என்று புகழ்ந்தார். அவர் பேசுகையில்:

  • இந்தியாவும் இஸ்ரேலும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல, அவை சகோதர நாடுகள்.

  • பிரதமர் மோடியின் வருகை இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்.

  • இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2 மடங்கு அதிகரித்துள்ளது; புரிதல் 4 மடங்கு உயர்ந்துள்ளது.

  • இந்தியாவில் யூதர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை போற்றத்தக்கது. இந்தியா ஒரு மிகச்சிறந்த சக்திவாய்ந்த தேசம், என்று தெரிவித்தார்,

பிரதமர் மோடியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

1. பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு: “அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் அடைந்த வேதனையை நான் உணர்கிறேன். மும்பை பயங்கரவாதத் தாக்குதலும், இங்கு நடந்த தாக்குதலும் ஒன்றே. பொதுமக்களைக் கொல்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை.”

2. பாலஸ்தீனப் பிரச்னை: “பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய சரியான தருணம் இது. இரு நாடுகளும் அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ இந்தியா என்றும் ஆதரவளிக்கும்.”

3. வரலாற்று உறவு: “இந்தியாவில் யூதர்கள் எவ்வித அச்சமுமின்றி வசிக்கின்றனர். இந்தியா யூதர்களின் தாய்நாடாகவே திகழ்கிறது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் பிணைக்கப்பபட்டது.”

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

இரு நாட்டுப் பிரதமர்களும் மேற்கொண்ட ஆலோசனையில் சில முக்கிய பாதுகாப்பு முடிவுகள் எடுக்கப்பட்டன:

  • இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்சன சக்கரம்’ ஆயுதத் தயாரிப்பில் இணைந்து செயல்படுவது.

  • இஸ்ரேலின் புகழ்பெற்ற ‘அயன் டோம்’ (Iron Dome) ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குப் பகிர்வது.

  • தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள்.

உலகளவில் கவனிக்கப்பட்ட பயணம்

பிரதமர் மோடி கடைசியாக 2017-ல் இஸ்ரேல் சென்றிருந்தார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி பயணித்த ‘இந்தியா ஒன்’ விமானத்தின் பாதையை ‘பிளைட்ரேடார் 24’ இணையதளத்தில் சுமார் 9,225 பேர் நேரலையில் கண்காணித்துள்ளனர். இது உலகளவில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

சந்திப்பின் முடிவில், “இந்தியா – இஸ்ரேல் இடையிலான உறவு அனைத்துத் துறைகளிலும் வலுப்பெறும்” எனப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: India Israel RelationsPM Modi Israel VisitPM Modi Knesset SpeechPM Modi Netanyahu Meeting
Previous Post

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்; ‘தமிழகமே போற்றும் எளிமையின் சிகரம்’ – தலைவர்கள் புகழஞ்சலி!

Next Post

வார இறுதி விடுமுறை: சென்னையிலிருந்து 785 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முழு விவரம்!

Related Posts

Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026
Donald Trump

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

04/03/2026

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

04/03/2026

“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் கொல்லுவோம்” – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

04/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் தவிப்பு

04/03/2026

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம்!

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved