Tuesday, August 18, 2026
33 °c
Tiruvannamalai
31 ° Wed
32 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தென்காசி: “பாம்புக்கோவில் சந்தையில் `தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ்’ நிற்கும்” – ஆனந்தன் அய்யாசாமி

பா.ஜ.க மாவட்டத் தலைவர் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Balaji by Balaji
03/07/2026
in தமிழ்நாடு
0
Anandan Ayyasamy - Ashwini Vaishnaw Railway Minister,

Anandan Ayyasamy - Ashwini Vaishnaw Railway Minister,

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று, தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் 15 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, வாசுதேவநல்லூர் பகுதியின் ஒரே ரயில் நிறுத்தமான பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் விரைவு ரயிலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார்.

Tambaram Kollam Express Stoppage
Tambaram Kollam Express Stoppage

அந்த மனுவின் அடிப்படையில், 16101/16102 எண் கொண்ட தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 2) அனுப்பியுள்ள கடிதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும்: ஆனந்தன் அய்யாசாமி தனது கோரிக்கை மனுவில், “பாம்புக்கோவில் சந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் இந்த ரயில் நிறுத்தத்தால் பெரும் பயனடைவர். குறிப்பாக, தமிழகத்தின் எலுமிச்சை தலைநகராக விளங்கும் இப்பகுதியின் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் நிறுத்தம் வர்த்தக ரீதியாகப் பெரும் உதவியாக அமையும்” என்பதை வலுவாக வலியுறுத்தியிருந்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மத்திய அமைச்சருக்கு நன்றி: பொதுமக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, உடனடியாக ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு, தென்காசி மாவட்ட மக்கள் சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் ஆனந்தன் அய்யாசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள இதர ரயில்வே கோரிக்கைகளும் இதேபோல் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Tags: Anandan Ayyasamy BJP TenkasiAshwini Vaishnaw Railway MinisterPampukovil Shandy Railway StationSouthern Railway Stoppage ApprovalTambaram Kollam Express StoppageTenkasi Railway News TodayVasudevanallur Lemon Farmers Transportation
Previous Post

நியூ ஜெர்சியில் FeTNA தமிழ் மாநாடு: அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு பங்கேற்பு!

Next Post

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved