Thursday, July 23, 2026
31 °c
Tiruvannamalai
32 ° Fri
33 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

தூத்துக்குடி காவல் மரணத்திற்கு உதயநிதி கண்டனம்

admin by admin
23/07/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்துக்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது இறுதி தருணங்களில் காவல்துறையினர் தமக்கு இழைத்த அநீதியை அருணாச்சலமே கூறியிருப்பது மனதை உலுக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காவல் மரணங்கள் நடைபெறும் ஒவ்வொரு முறையும், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகும் தகவல் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

AlsoRead

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் திரைப்படம் பார்ப்பதில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில், தமிழ்நாட்டில் அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. பணிக்குத் திரும்பிய பிறகாவது இந்த காவல் மரணம் குறித்து அரசு விளக்கம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரங்களில் வலுத்து வருகிறது.

Tags: உதயநிதி கண்டனம்தூத்துக்குடி காவல் மரணம்முதல்வர் விஜ
Previous Post

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

Related Posts

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026
உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved