Tuesday, September 8, 2026
36 °c
Tiruvannamalai
31 ° Wed
30 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

நிர்மலா சீதாராமன் விமர்சனம்

admin by admin
23/07/2026
in இந்தியா, செய்திகள்
0
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman addressing a Press Conference, in New Delhi on June 28, 2021.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வை விரும்பவில்லை; குழப்பத்தையே ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசு இந்த விவகாரத்தில் உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மட்டத்திலேயே வினாத்தாள் கசிவு சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வின் புனிதத்தன்மையை குலைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்” என்றார்.

மேலும், “வினாத்தாளை கசியவிட்டது, வாங்கியது, விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், “விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கும் நிலையில், தொடர்ந்து புதிய நிபந்தனைகளை முன்வைத்து அவையின் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.

“நீட் விவகாரத்தையும் மாணவர்களின் உணர்வுகளையும் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை முடக்குகிறது. விவாதம் நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான் அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு தீர்வைவிட இடையூறு செய்வதில்தான் ஆர்வம் உள்ளது” என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகளிடம் மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறிய அவர், “பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களின் பேச்சை தடுக்காமல், ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபடுங்கள்” என்றும் வலியுறுத்தினார்.

Tags: நிர்மலா சீதாராமன் விமர்சனம்வினாத்தாள் கசிவு
Previous Post

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

Next Post

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved