Friday, July 24, 2026
33 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

-பிரேமலதா விஜயகாந்த்

admin by admin
24/07/2026
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு
0
சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“இது சினிமா கிடையாது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

AlsoRead

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், தொகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

“தொகுதிகளில் ஆய்வு செய்யும்போது அதிகாரிகளிடம் பேசுகிறோம். ஆனால் இதுவரை ஒரு டெண்டரும் விடப்படவில்லை. எந்தவொரு அடிப்படை பணிகளும் தொடங்கப்படவில்லை. இது விளம்பரத்திற்காகவோ, புகைப்படம் எடுப்பதற்காகவோ, ரீல்ஸ் போடுவதற்காகவோ நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல. பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், அரிசி விலை உயர்ந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கவனிக்காமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது சரியல்ல” என்றும் கூறினார்.

எல்.நினோ தாக்கத்தால் தமிழகம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த பிரேமலதா, பஞ்சம், வறட்சி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற காவல் மரணம் குறித்து பேசிய அவர், காவல்துறையினருக்கு ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை எந்த சட்டத்திலும் வழங்கப்படவில்லை என்றும், காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படும் நபர்களை சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். “மக்கள் விரும்புவதை அரசுகள் கேட்டு செயல்பட வேண்டும். நாங்கள் எப்போதும் மக்கள் பக்கம் இருப்போம். தமிழகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை; பழைய நிலையே தொடர்கிறது” என்றார்.

“இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Tags: பிரேமலதா விஜயகாந்த்ரியல் ஹீரோரீல் ஹீரோவாக்குறுதி
Previous Post

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

Next Post

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

Related Posts

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026
மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

24/07/2026

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
  • மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
  • மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
  • ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved