Tuesday, September 8, 2026
30 °c
Tiruvannamalai
31 ° Wed
30 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

-ராகுல் காந்தி

admin by admin
25/07/2026
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட வீடியோ அறிக்கையில், மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ராகுல் காந்தி பாராட்டினார்.

நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் எதிர்காலம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்க அமைதியான முறையில் போராடியதாகக் கூறிய அவர், அந்தப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதேநேரத்தில், மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், “இந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது; அஞ்ச வேண்டாம்” என்றும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் இந்திய இளைஞர்களின் வெற்றி என்றும், மக்களின் விருப்பமே ஜனநாயகத்தில் உயர்ந்தது என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மாணவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு, பெல்லட் துப்பாக்கி, தடியடி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை என்றும், இறுதியில் அரசாங்கமே மக்களின் விருப்பத்துக்கு பணிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை சீர்திருத்தம் தொடர்பாக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியின் முயற்சியை பாராட்டிய பிரியங்கா காந்தி, இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், மக்களின் குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Tags: நேரம் வந்துவிட்டதுபாஜக அரசுராகுல் காந்தி
Previous Post

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

Next Post

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved