Wednesday, September 23, 2026
16 °c
Columbus
15 ° Thu
14 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

admin by admin
08/08/2026
in இந்தியா
0
ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை மற்றும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் ராஞ்சியில் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.

ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசுக்கும் ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்துக்கும் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் சுதிவ்யா குமார் தலைமையிலான அரசு குழுவும், ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் இதில் பங்கேற்றன. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

AlsoRead

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

இதையடுத்து, தங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமைக்குள் அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால், திங்கள்கிழமை மாநில சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிஎஸ்சி சீர்திருத்த மன்றத்தின் தலைவர், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இருப்பினும், ஜேபிஎஸ்சி தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

இதுகுறித்து அமைச்சர் சுதிவ்யா குமார் கூறுகையில், “மாணவர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளையும் கவலைகளையும் அரசு முழுமையாக கேட்டறிந்துள்ளது. அவர்களின் கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலித்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையில், ஏழு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ தலைமையிலான மற்றொரு குழுவும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக எட்டு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மாணவர்கள் போராட்டம்ஜார்க்கண்ட்ஜேபிஎஸ்சி
Previous Post

வேளாண் நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை

Next Post

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

Related Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026
மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

16/08/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved