Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
22/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு தலைமையேற்று கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வந்தவாசி வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் நம்பேடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.அருணாச்சலம் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நம்பேடு கிராமத்தில் காயக்குடிகளாக நாங்கள் விவசாயம் செய்து வயிற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் பட்டா எண் 3680ல் தனியார் ஒருவர் புதியதாக கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஷர் அமைத்து தொழில் தொடங்கியுள்ளார்.

கல்குவாரி அமைந்துள்ள பகுதியில் வீடும் வயலுமாக கால்நடைகளுடன் வாழ்ந்து வருகின்றோம். அந்த பகுதியையொட்டி இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதியை யொட்டி இடையந்தாங்கல், கண்டேரிபுரம் கிராமங்கள் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த நிலம் விவசாயம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் நிலத்தினை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AlsoRead

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

“16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?

கல்குவாரியை தடை செய்யக்கோரி வந்தவாசி தாசில்தார் மற்றும் செய்யாறு சார்ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் இயங்கி வரும் கல்குவாரி இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மனுவனை பெற்றுக்கொண்ட கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags: ஆட்சியரிடம் மனுகல்குவாரிதடைதிருவண்ணாமலைநம்பேடு கிராம மக்கள்
Previous Post

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Next Post

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் கடனுதவி

Related Posts

tamilnadu Govt

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

06/03/2026
Karnataka CM Siddaramaiah announces

“16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!

06/03/2026

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?

06/03/2026

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!
  • “16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!
  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved