Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பேச்சு

admin by admin
27/08/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்

oplus_0

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செங்கத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான் என பேசினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் கிழக்கு, மத்திய, மேற்கு, ஒன்றியம் பேரூர், தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவைதலைவர்கள் வீரபத்திரன், சேட்டு, குப்புசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச் செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தார்.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைதலைவர் கோ.கண்ணன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. பேசியதாவது :

இந்தியாவில் முதல் முதலில் ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுகதான். மலைவாழ் மக்களுக்கு தனி வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற வாரியங்கள் அமைத்து திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது

கான்கிரீட் வீடுகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். கலைஞர் அறிவித்த கான்கிரீட் வீடுகள் இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்பொழுது தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் என்ற  திட்டம் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. திமுக மட்டும்தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கி மாணவர்களுக்கு கல்வி கற்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

சொந்த விருப்பு, வெறுப்புகள் கலைந்து அனைவரும் கடமை உணர்வோடு பாடுபட்டால் மட்டும்தான் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகளும், கொள்கைகளும் மனதில் உள்வாங்கி தற்பொழுது அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சி தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின்  கொடுத்து வருகிறார்.

நாட்டு மக்களுக்கு சட்டமும், திட்டமும் சரியாக சென்றடைய வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும். அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் முழு ஈடுபாடு கட்சி உணர்வோட பணியாற்றிட வேண்டும்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இவ்வாறு அவர் பேசினார்

இதனைத் தொடர்ந்து பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது :

10 ஆண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அறிவிப்புகள் மட்டுமே அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். திமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் அமைந்த உடன் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுகின்றனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் தொடர்ந்து தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி இருந்தால் மட்டுமே மக்களுக்கான சலுகையும், கட்சியும் பலமாக இருக்கும். தலைமை அறிவிப்பை ஏற்று முழுமையாக ஒவ்வொரு தொண்டனும் பாடுபட்டு தி.மு.க.வின் அலை தமிழ்நாட்டில் வீச வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகரக் செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார், ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா  உட்பட பல ர் கலந்து கொண்டனர்.

Tags: செங்கம்திருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்

Next Post

திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved