Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பன்ட் மற்றும் கில் போட்டிக்கு தயார்: புனேவில் 2வது டெஸ்ட் !

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in விளையாட்டு
0
பன்ட் மற்றும் கில் போட்டிக்கு தயார்: புனேவில் 2வது டெஸ்ட் !

‘பன்ட், கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகிவிடுவார்கள் என நம்புகிறேன்

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நியூசிலாந்து அணியுடன் புனேவில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட ரிஷப் பன்ட், ஷுப்மன் கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார்கள் என இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் கூறியுள்ளார்.

AlsoRead

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வா?

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னுக்கு சுருண்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வானம் மேகமூட்டமாக இருந்ததுடன் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது பெரும் பின்னடைவை கொடுத்தது.

இதனால், புனே டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூரு டெஸ்ட் போட்டியில் கீப்பிங் செய்தபோது முழங்கால் மூட்டில் காயம் அடைந்த ரிஷப் பன்ட் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத முன்னணி பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் இருவரும் புனேவில் களமிறங்குவார்களா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இது குறித்து, இந்திய அணி துணை பயிற்சியாளர் டென் டஸ்சேட் நேற்று கூறுகையில், ‘பன்ட், கில் இருவரும் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகிவிடுவார்கள் என நம்புகிறேன். பன்ட் கொஞ்சம் சிரமப்பட்டாலும், அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது. அஷ்வினுக்கு காயம் எதுவும் இல்லை. அவர் ஃபிட்டாக உள்ளார்.

கில் தசைப்பிடிப்பும் சரியாகிவிட்டது’ என்றார். நேற்றைய வலைப்பயிற்சியின்போது துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில், பன்ட் அதை வெளியில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், பேட்டிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பன்ட் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார். பயிற்சியின் நிறைவுக் கட்டத்தில் அவர் சிறிது நேரம் கீப்பிங்கிலும் ஈடுபட்டார். இதனால் இந்திய அணி நிர்வாகம் உற்சாகம் அடைந்துள்ளது.

எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் தமிழ்நாடு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து, களமிறங்கும் 11 வீரர்களை இறுதி செய்வது இந்திய அணி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhஇந்தியாடெஸ்ட் போட்டிநியூசிலாந்து
Previous Post

தங்கம் விலை புதிய உச்சம்! ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு!

Next Post

ராஜவிருந்து கூட கூகுள் நிறுவனத்திற்கு லாபம் தான்!

Related Posts

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு : பி.சி.சி.ஐ அறிவிப்பு

20/03/2025
கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

07/02/2025

ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா ஓய்வா?

06/02/2025

மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் 18ஆவது ஐபிஎல் தொடர்…

22/11/2024

கிரிக்கெட் சண்டைக்கு டைம் வந்தாச்சு! ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும்

05/11/2024

காட்பாடியில் கிரிக்கெட் அகாடமி துவக்கம்:இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பங்கேற்பு!

29/10/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved