Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/11/2024
in வானிலை
0
5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது!

தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, வேளச்சேரி, பெருங்களத்தூர், கோயம்பேடு, அடையாறு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, கோயம்பேடு, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது சென்னை மாநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

AlsoRead

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே, இன்று புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகலாம். அதன் தாக்கத்தால் அப்பகுதியில் வரும் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, 7ம்தேதி முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில், புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு, 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில், தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இதனால், தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரள பகுதிகளில், வரும் 7ம் தேதி முதல் 11ம்தேதி வரை, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது தென்கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய வானிலை ஆய்வு மையம்வானிலைவானிலை ஆய்வு மையம்
Previous Post

2024 அக்டோபரில் 90.83 லட்சம் பேர் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம்!

Next Post

வேலூரில் வேன் கவிழ்ந்து விபத்து!

Related Posts

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

18/08/2026
தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

13/08/2026

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

03/08/2026

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

24/07/2026

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03/03/2026

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

28/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved