Sunday, September 20, 2026
26 °c
Tiruvannamalai
27 ° Sun
27 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம்

admin by admin
03/08/2026
in வானிலை
0
ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும். இதர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

AlsoRead

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

ஆகஸ்ட் 7-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு 7 செ.மீ., ஊத்து 6 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, கோவை மாவட்டம் உபாசி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தேனி மாவட்டம் தேக்கடி மற்றும் கடலூர் மாவட்டம் மீ–மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags: கனமழைசென்னைமழைவானிலை ஆய்வு மையம்
Previous Post

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

Next Post

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

Related Posts

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

18/08/2026
தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

13/08/2026

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

24/07/2026

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03/03/2026

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

28/02/2026

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

21/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved