Friday, July 24, 2026
35 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

admin by admin
24/07/2026
in வானிலை
0
மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (ஜூலை 25) முதல் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, குஜராத்திலிருந்து கர்நாடகா வரை சராசரி கடல் மட்டத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

AlsoRead

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

இதன் காரணமாக, ஜூலை 25-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

ஜூலை 26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஜூலை 27 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை முதல் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாகக்கூடும்.

மேலும், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. பந்தலூர் மற்றும் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் தலா 3 செ.மீ. மழையும், செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா, மேல் பவானி மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags: மதுரைவெப்பநிலை அதிகரிப்புவேலூர்
Previous Post

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Next Post

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

Related Posts

Tamil Nadu Weather Update (

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03/03/2026
Tamil Nadu Weather Update

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

28/02/2026

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

21/11/2024

5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது!

04/11/2024

கனமழை கட்டுப்பாட்டில் மதுரை; இன்றும் தொடருமா மழை?

26/10/2024

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

24/10/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
  • மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
  • மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
  • ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved