Friday, July 24, 2026
18 °c
Columbus
22 ° Sat
24 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/11/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

0
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு (Combined Engineering Service Examination) வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகிய துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக பல்வேறு துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான தேர்விற்கு 13.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 96 நபர்களும், பொதுப்பணித் துறையில் 42 நபர்களும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 52 நபர்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 18 நபர்களும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 38 நபர்களும், என மொத்தம் 246 நபர்கள் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

அவர்களில் 20 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் மரு. ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

Next Post

புதுச்சேரியில் பாறை ஓவிய முகாம்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved