Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/02/2025
in தமிழ்நாடு
0
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விளையாட்டுத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழா நடைபெற்றது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை ஏற்று பேசியதாவது:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது சிறந்த முன்னெடுப்பான செயலாகும்.

இதன்மூலம் ஆண்டுதோறும் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் உயர்கல்வி, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெறும்போது ஆங்கில மொழி தேவையான ஒன்றாக உள்ளதாக ஆட்சியர் பேசினார்.

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழ்நாட்டில் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று  முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் இதுபோன்ற பயிற்சிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் பதவிகளை அடைய வேண்டும். மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் வானளாவிய அளவில் இருக்க வேண்டும். கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் எதிலும் சாதிக்கலாம்.

தமிழ்நாட்டில் 22 சிறு விளையாட்டு மைதானங்கள் அமைக்க அறிவிக்கப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி ஆகியற்றிற்கு தலா ஒரு சிறு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொப்பம்பட்டியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், வீடால்க் பயிற்சி ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்  பரிமளா, ஒட்டன்சத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி, முக்கிய பிரமுகர்கள்  பொன்ராஜ், சுப்பிரமணியன், பி.சி.தங்கம் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags: Dinigul NewsDMKMinister ChakarapaniUdayanidhistalin
Previous Post

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

Next Post

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved