Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/02/2025
in இந்தியா
0
டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற போட்டியில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த முடிவுகளை உண்மையாக்கி உள்ளன. அதன்படி 27 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து இருக்கிறது.

பெரும்பான்மைக்கும் (36 தொகுதிகள்) அதிகமான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதால் பா.ஜ.க முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சொல்லியபடி வெற்றியை தனதாக்கிய பா.ஜ.கவில் இப்போது டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வராக யார் அமரப் போகிறார்கள் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று டெல்லி பா.ஜ.க தலைவர் சச்தேவ் கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கட்சியினர் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். எங்கள் கட்சியின் உயர் தலைமைக்கு கிடைத்த முக்கிய வெற்றி. டெல்லியில் நிலவும் மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் களைகட்டிய நிலையில் தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. அந்த 5 பேரின் விபரங்கள் :-

பர்வேஷ் சாகிப் சிங் வர்மா:

முன்னாள் எம்.பியான பர்வேஷ் சாகிப் சிங் வர்மா பா.ஜ.கவின் முக்கிய முகமாவார். தேர்தலில் டெல்லியில் 3 முறை வென்ற அர்விந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். டெல்லியின் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் என்பது கூடுதல் பலம். கெஜ்ரிவாலின் வலிமையான ஓட்டு வங்கி மற்றும் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை தேர்தலில் உடைத்தவர் என்ற பெயர் இவருக்கு உண்டு.

விஜேந்தர் குப்தா

டெல்லி பா.ஜ.க தலைவராக திறம்பட செயலாற்றியவர். கட்சியின் மூத்த தலைவர். ஆம் ஆத்மியின் கடும் போட்டிக்கு இடையிலும் 2015 மற்றும் 2020 தேர்தலில் ரோகிணி தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்றவர். டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர். கட்சியின் சீனியர், அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் இவர் பெயர் பரிசீலனையில் உள்ளது.

மன்ஜிந்தர்சிங் சிர்சா

ரஜௌரி கார்டன் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி வேட்பாளர் தன்வாட்டி சந்தேலாவை தோற்கடித்தவர். முதலமைச்சர் ரேஸ் பட்டியலில் இவரது பெயர் முன்னணியில் இருக்கிறது.

துஷ்யந்த் கவுதம்

இவர் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் தலித் தலைவர். பா.ஜ.க முதல்வர் போட்டியில் இவரும் முன்னணியில் உள்ளார். கட்சியின் தொண்டர்கள் ஆதரவு கொண்ட இவர், முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என்பது சீனியர்கள் கருத்தாக உள்ளது.

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

ஹரிஷ் குரானா

மோதி நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷிவ்சந்திரன் கோயலை தோற்கடித்தவர். 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை டெல்லியின் முதலமைச்சராக இருந்த பா.ஜ.க மூத்த தலைவர் மதன்லால் குரானாவின் மகன். டெல்லி பா.ஜ.க செயலாளராக உள்ளார். கட்சியின் செய்தித்தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BJPDelhi electionNarendramodi
Previous Post

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Next Post

காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி; இருவர் கைது

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved