Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு : சில்லறை பிரச்னைக்கு தீர்வு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
12/02/2025
in தமிழ்நாடு
0
அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு : சில்லறை பிரச்னைக்கு தீர்வு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் நெடுதுாரம் பயணிக்கும் பயணிகள் பணப்பயன்பாடு இல்லாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் ஏராளமான பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களும் உள்ளன.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

திண்டுக்கல் டூ சென்னை, விழுப்புரம், நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் மக்கள் செல்கின்றனர். அவர்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் சொகுசு பஸ்கள் 19 இயக்கப்படுகின்றன.

கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு :

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கூடுதலாக 4 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கண்டக்டர்களுக்கு கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் வகையிலான மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மிஷின்களை தினமும் சார்ஜ் செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது விரைவு போக்குவரத்துக் கழக சொகுசு பஸ்களில் நீண்ட துாரம் பயணிக்கும் பயணிகள் கூகுள் பே, போன் பே, பே.டி.எம். போன்ற செயலிகளை பயன்படுத்தி டிக்கெட்டுக்கான பணத்தை எளிதில் அனுப்புகின்றனர். இதனால் பயணிகள் சிரமின்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டர்களுக்கும் பயணிகளிடம் பெறும் பணத்திற்கு மீதி சில்லறை வழங்குவதற்கு சிக்கல் இல்லாமல் இந்த மிஷின் உதவியாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் விஜயகுமார் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன் எங்கள் டெப்போக்களுக்கு மேல் அதிகாரிகள் புதிதாக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் மிஷின்களை கொண்டு வந்தனர்.

முதல் கட்டமாக அதை பயன்படுத்துவதற்கு கண்டக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பஸ்களில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் பொது மக்கள் தங்கள் பணத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தால் கூட செல்போன் ஆப்களை பயன்படுத்தி டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி பயணிக்கலாம் என்றார்.

Tags: ATM CardBus TicketQR CodeTNSTC
Previous Post

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

Next Post

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved