Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/02/2025
in தமிழ்நாடு
0
இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மலட்சுமி (வயது38 )என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பாடங்கள் மொழிப்பாடங்களாக கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் 3ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சிக்கல் இருந்துள்ளது.

இந்த சூழலில் 3ம் வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு ஆசிரியை பத்மலட்சுமி கூறி இருக்கிறார். அப்போது அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபடைந்த அந்த ஆசிரியை மாணவரை கடுமையாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்தி ஆசிரியை மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை பத்மலட்சுமியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த சம்பவம் மக்களிடையே விவாதப் பொருளாக மாறி உள்ளது.

Tags: Hindi LanuageTeacher beats
Previous Post

கர்நாடகாவுக்கு பேருந்து சேவையை நிறுத்திய மஹாராஷ்டிரா அரசு : என்னாச்சு?

Next Post

பெண்களின் சக்தி எல்லா துறைகளிலும் நாட்டை வலுப்படுத்தும் : பிரதமர் மோடி பெருமிதம்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved