Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
27/02/2025
in தமிழ்நாடு
0
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார். இவரது மனைவி சுமிதா பேரூராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினர். இந்நிலையில் கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்ரவரி 25ம் தேதி அன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தினேஷ்குமார், மோகன் ஆகியோர், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற அரசைக் கண்டித்தும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நேற்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போராடட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் தடையை மீறி திருக்கழுக்குன்றத்தில் போராட்டம் நடத்த முயற்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags: AIADMKJayakumar arrestTamilnadu News
Previous Post

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Next Post

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடுமா? சீமான் சவால்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved