Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/03/2025
in தமிழ்நாடு
0
காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘பிங்க் ஆட்டோ’ மற்றும் 9 மாவட்டங்களில் தோழி விடுதி உட்பட பெண்களுக்கான சிறப்புத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘பிங்க் ஆட்டோ’ உள்பட பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ சேவையை வழங்கினார்.இவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் உள்ளிட்டவற்றை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார்.

இந்த நிலையில் பணிபுரியும் பெண்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்துவரும் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தின் விரிவாக்கம் உள்பட மேலும் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, தேனி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ரூ. 72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் மகளிர் தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

AlsoRead

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

“விழாவிற்கு வந்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.. நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை… ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை என்பார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள்.

பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார். திராவிட இயக்கத்தின் பேதமே ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதாகும். பெரியார் வழி வந்த அண்ணா, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.

பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 9 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. இதன்படி காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, கரூர், தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது. ஆணாதிக்க மனோபாவம் குறைய வேண்டும். பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள்” என்று அவர் கூறினார்.

Tags: MKStalinWomens DayWomens Hostel
Previous Post

புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை: தமிழக அரசுக்கு பாராட்டு

Next Post

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்

Related Posts

Power Cut

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026
annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved