Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6ம் நாள் உற்சவம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
08/03/2025
in தமிழ்நாடு
0
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6ம் நாள் உற்சவம்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6 நாள் உற்சவம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு விழாக்களும் நடைபெறும். மேலும், ஒவ்வொரு வருடமும் முக்கிய திருவிழாவாக மாசி மகப் பெருவிழாவும் நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான மாசி மகத் திருவிழா வருகிற மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 3ஆம் தேதி நடந்தது.

அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகாதீபாரதனைகள் மற்றும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 6ஆம் நாள் நிகழ்ச்சியாக, நேற்று கோயிலை கட்டிய விபச்சித்து முனிவருக்கு பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தருளும் ஐதீகத் திருவிழா நடைபெற்றது.

முன்னதாக, விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை பழமலைநாதர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் மகா மண்டபத்தில் எழுந்தருள, அதற்கு நேர் எதிரில் அமைந்துள்ள சித்தர் மண்டபத்தில் விபச்சித்து முனிவர் எழுந்தருள, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமூர்த்திகளும் விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தருள மகா தீபாரதனை நடைபெற்றது.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

அப்போது, கைலாய வாத்தியங்கள் முழங்க, பழமலைநாதரை தாலாட்டி, பக்தர்களின் நமசிவாய கோஷங்கள் ஒலிக்க பஞ்ச மூர்த்திகளும் கோயிலை வலம் வந்து சன்னதி வீதி கிழக்கு கோபுர வாயில் முன்பு சுவாமிகள் வெளியே வர பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை பழமலைநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, விபச்சித்து முனிவருக்கு காட்சி தந்தவாறு வீதி உலா வர, தெருவடைச்சான் திருவிழா நடைபெற்றது.

இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சன்னதி வீதி, கடைவீதி, தென்கோட்டை வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்ததால், பக்தர்களும் வணிகர்களும் சுவாமிக்கு புத்தாடைகள் கொடுத்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு வரை தெருவடைச்சான் திருவிழா நடந்ததால், போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags: Masi Maham FestivalVriddhachalam Vridthakereeswarar Temple
Previous Post

பிரதமரின் சமூக வலைதள பக்கத்தை நிர்வகித்த சாதனைப்பெண்கள்

Next Post

உயிருடன் பிறந்த கன்றின் கால்களை வெட்டிய கால்நடை உதவியாளர்: அதிர்ச்சி சம்பவம்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved