Tuesday, October 13, 2026
27 °c
Tiruvannamalai
28 ° Wed
27 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்’ : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு இபிஎஸ் பதில்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
21/03/2025
in தமிழ்நாடு
0
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்’ : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு இபிஎஸ் பதில்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கு குறித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு , ‘எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட வேண்டாம்’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. நிதி மேலாண்மை தொடர்பான குழு அரசுக்கு என்ன அறிக்கை தாக்கல் செய்தது? ஏதோ புள்ளி விவரத்தை சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது தி.மு.க., அரசு.

அரசின் கடன் தொடர்பாக எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை. அரசின் கடன் குறித்த கேள்விக்கு உரிய பதில் இல்லை. பட்ஜெட் மீதான அமைச்சரின் பதிலுரை ஏமாற்றம் தருகிறது. வெறும் வார்த்தை ஜாலங்களாக தான் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

செய்தியாளர்களுக்கு இ.பி.எஸ் பதில்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், செய்தியாளர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:

பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்துங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம், எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்ட தேவையில்லை. நீங்கள் எப்படி எல்லாம் கடந்த காலத்தில் இருந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. இரண்டையும் சேர்த்து பார்க்க வேண்டாம்.

தன்மானம் உள்ளவர்கள்

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

தேர்தல் வரும் போது கூட்டணியை முடிவு செய்வோம்; எங்களது கொள்கை நிரந்தரமானது. அறிவாலயத்தில் மேல்மாடியில் சி.பி.ஐ., விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கீழே காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதான் அவர்களது நிலைமை.

அ.தி.மு.க., ஒரு போதும் தன்மானத்தை இழக்காது. எங்களுக்கு வேணும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது. தமிழக மக்கள் பாதிக்கப்படும் திட்டத்தை எதிர்ப்பதில் முதன்மையாக இருப்போம். தி.மு.க., அகற்றப்பட வேண்டிய அரசு. அது தான் எங்களுடைய கொள்கை.

அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. கட்சி ரீதியாக எங்களுக்கு எதிரி தி.மு.க., மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும். தி.மு.க., அரசு 2026ல் மக்கள் துணையோடு அகற்றப்படும். இது உறுதி. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Tags: EdapadipalanisamyFinance Minister Thangam Tennarasu
Previous Post

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்,நகை : தீ விபத்தால் அம்பலமானது

Next Post

‘இந்திய நாட்டுக்கு எதிராக போராடுகிறோம்’ -என்ற ராகுல் காந்திக்கு கோர்ட் சம்மன்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved