Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/03/2025
in தமிழ்நாடு
0
சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. விபத்து, தற்கொலை, கொலை போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இத்தகைய போராட்டங்கள் வழக்கமாக நடக்கின்றன.

இதன் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை வலியுறுத்தி இப்படி போராட்டம் நடத்துகின்றனர்.

அவற்றை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸ் மற்றும் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்வதற்குள், பதற்றம் ஏற்படுவதுடன் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டும் என்று போலீஸ் ஐந்தாவது கமிஷன் அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

ராஜஸ்தானில் இறந்தவர் உடல் மரியாதைச் சட்டம், 2023 ஐப் போலவே தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான கமிஷன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இறந்த ஒவ்வொருவருக்கும் கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.

குடும்பத்தினர் உடலை உரிமை கோர மறுத்தால் அல்லது சடலத்தை அடக்கம் செய்ய மறுத்தால், மாநில அதிகாரிகள் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இறுதி சடங்கில் இடையூறு செய்வது, சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Tags: Tamil News TodayTn Police
Previous Post

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு

Next Post

மீண்டும் டெல்லி பயணிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்? தடதடக்கும் எஃகுக் கோட்டை

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved