Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

2026ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.,- த.வெ.க., இடையே தான் போட்டி : விஜய் ஆணித்தரம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
12/04/2025
in தமிழ்நாடு
0
‘உங்களை நம்பியே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்’ : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேச்சு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., – த.வெ.க., இடையே தான் போட்டி என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

பா.ஜ.,கவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழகத்தில் நடப்பது என்ன?

பல செயல்பாடுகள், பா.ஜ.க., தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன. தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.தி.மு.க.,வை பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க, மீண்டும் கைப்பிடித்துள்ளது. இது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை. மூன்று முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது என்பது நாம் சொல்லித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில், ‘நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி’ என்று பா.ஜ.க.வும். ‘தாங்கள்தான் பா.ஜ.கவை எதிர்க்கும் ஒரே அணி’ என்று தி.மு.க.வும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழக மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி. தி.மு.க.வும் பா.ஜ.க.,வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது. தங்களை ஏமாற்றி வந்தவர்கள் யார்? தங்களுக்கென்று உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

ஏற்கெனவே நம்முடைய பொதுக்குழுவில் அறிவித்தது போலவே, 2026ம் ஆண்டு தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற, ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்திற்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கும் இடையே தான்.

பா.ஜ.க., மற்றும் மக்கள் விரோத தி.மு.க.வின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி. மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வாகை சூடுவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Tags: actor vijayDMKMKStalinTVK vijay
Previous Post

விஜய் கைக்கு போனது துருப்புச்சீட்டு? எந்த அணியை வீழ்த்தும் தவெக?

Next Post

சூப்பர்சோனிக் வேகத்தில் எகிறிப்பறக்கும் தங்கம் விலை : ரூ.70,000-த்தைக் கடந்தது

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved