திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் 100 பேர், தலை சிறந்த வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களில் 30 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கான பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியை முடித்த மாணவர்கள், தங்களின் ஆய்வுக்கான கட்டுரைகள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
விழாவில் கல்லூரித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார். பி.ஆர்.ஓ சையது ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்.



