Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வரிகளை தொடர்ந்து குறைப்போம்: ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடரும்

சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உறுதி

admin by admin
26/09/2025
in இந்தியா, செய்திகள்
0
வரிகளை தொடர்ந்து குறைப்போம்: ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடரும்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது வரிகளை தொடர்ந்து குறைப்போம், ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும் என்று அவர் கூறினார்.

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி உத்தரபிரதேசத்தில் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் நேற்று முதல் செப்., 29ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இதனை 1.25 லட்சம் வர்த்தகர்களும், 4.50 லட்சம் பொதுமக்களும் பார்வையிட உள்ளனர்.
இந்த கண்காட்சியானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான ஒரு மேடையாக மட்டுமல்லாமல், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்தக் கண்காட்சியில் ரஷ்யா நெருங்கிய உறவு நாடாக பங்கேற்கிறது. இன்று (செப்.,26) இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடல் நடைபெற இருக்கிறது. இந்த உரையாடல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கூட்டு வணிகங்கள் கூட்டு முயற்சிகள் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில், இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, கண்காட்சியில் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முன்னதாக, பிரதமருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கன்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் முக்கிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைக்கான கட்டுமானம் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் ஆலை உத்தரபிரதேசத்தில் நிறுவப்படும்.
இன்றைய உலகில் நிதி தொழில்நுட்பத் துறை மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. அனைவருக்கும் ஏற்ற வகையில் புதுமையான தளங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. யுபிஐ. ஆதார், டிஜி லாக்கர், மற்றும் ஓஎன்டிசி உள்ளிட்ட தளங்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

உள்ளூர் வியாபாரிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை, யுபிஜயைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். நீங்கள் ஒரு மாலில் ஷாப்பிங் செய்தாலும் சரி, தெருவில் தேயிலை விற்பனை செய்தாலும் சரி. அனைவரும் யுபிஐயைப் பயன்படுத்துகிறார்கள். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் இலக்கை அடைய இந்தியா முன்னேறி வருகிறது.
தங்களின் தோல்விகளை மறைத்து விட்டு, காங்கிரசும், அதன் கூட்டணிகளும் மக்களிடையே பொய்யை கூறி வருகின்றன. இந்திய மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை நாங்கள் உயர்த்தியுள்ளோம்.

நாங்கள் இத்துடன் நிற்கப் போவதில்லை. பொருளாதாரம் மேலும் வலுவடையும் போது, மக்கள் மீதான வரிச்சுமை தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும்.. நாட்டு மக்களின் ஆசீர்வாதத்துடன், ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் தொடரும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி இல்லை. ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்த முயற்சிகள் மக்களின் கைகளில் அதிக சேமிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: பிரதமர் மோடிஜி.எஸ்.டி.
Previous Post

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்ட குழந்தை இறந்தது ஏன்?

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் கூடாது

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved