திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ முகாம் திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையுடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவமனை நடத்தும் இந்த மருத்துவ முகாம் திருப்பத்தூர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்கராஜூடன் இணைந்து வேலூர் நறுவீ மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் விநாயக் சுக்லா, டாக்டர் ரே ஜார்ஜ், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் சிகிச்சை அளிக்கிறார்கள்.
தொடர்ந்து தண்டுவட மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம் மருத்துவ முகாம் தொடக்க விழா நேற்று திருப்பத்தூர் ரித்வி மருத்துவமனையில் நடைபெற்றது. ரித்வி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் யோகானந்த் தங்கராஜ், நறுவீ மருத்துவமனையின் டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர் ரே ஜார்ஜ், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.



