திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வாணாபுரம், வரகூர் ஆகிய ஊராட்சி களைச்சேர்ந்த பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் முகாமைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



