Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது

admin by admin
28/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அருணகிரிபுரம் முதல் தெருவில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் முன்னிலை வகித்தார். அரசின் உத்தரவின் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திடவும், பொதுமக்களால் தெரிவிக் கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெறவும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி அருணகிரிபுரம் முதல் தெருவில் 39 வது வார்டு பகுதிகளுக்கான வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மேயர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடிநீர் வழங்கல் தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதி கள்,மழைநீர் வடிகால்வாய் பராமரித்தல் குறித்தும், நகரின் முக்கிய இடங்கள் திறந்தவெளி,சாலையோர பகுதி, குளம் மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் குறித்தும், பூங்காக்கள் பராமரித்தல் குறித்தும், வடகிழக்கு பருவமழை குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மாநகர் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேம்படுத்துவது மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்தும், மாநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம்செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்தும், மாநகர் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையாற்றியதாவது: இந்த வார்டு கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் உள்ளாட்சி பகுதிகளில் மக்களுடைய தேவைகளை கண்டறிந்து அது குறித்து நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டுமென்பதும். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கும் மக்களுடைய களத் தேவைகளுக்கும் இருக்கிற இடைவெளியை நிறப்புகின்ற பணி தான் இந்த வார்டு கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த பகுதிகளின் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அரசு அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்க இக்கூட்டத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அதனை தொடர்ந்து பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் 39 வது வார்ட்டில் உள்ள மரநாய்கன்குட்டையை தூர்வாரி நீர் வரத்து கால்வாயை சீறமைக்க கோரியும், மாநகராட்சி மணியாரி துவக்கப்பள்ளி மற்றும் திருக்கோவிலூர் சாலை உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கழிப்பறை வசதிசெய்துதர கோரியும், 39 வது வார்டில் உள்ள ஹய்டெக் நகர், சந்தோஷ் நகர், கோபி நகர், கணேசபுரம், கரியான்சட்டி தெரு ஆகிய பகுதிகளில் கூடுதலாக புதிய மின் கம்பம் அமைத்து மின் விளக்குகள் வசதி மேம்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநராட்சி திமுக செயலாளர் கார்த்திவேல்மாறன். மாநகராட்சி செல்வபாலாஜி, தி.மலை வட்டாட்சியர். மோகனராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags: திருவண்ணாமலை மாவட்டம்வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்
Previous Post

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

Next Post

கள்ளக்குறிச்சியில் நடந்த கராத்தே போட்டியில் எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக். பள்ளி மாணவிகள் சாதனை

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved