திருவண்ணாமலை எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் கராத்தே போட்டியில் கேல்ரத்னாஉலக சாதனை படைத்தனர்.
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் கல்லைக் கலைக்கூடம் சார்பில் கராத்தே கேல்ரத்னா உலக சாதனை போட்டி நடந்தது.
இப்போட்டியில திருவண்ணாமலை எ.வ. வேலு பெண்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இருந்து 45 மாணவிகள் கலந்துகொண்டனர். இம்மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் நிறுவனத் தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வாழ்த்தினார்.
தற்காப்பு கலை பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒரு கலை என்றும், அக்கலையில் தேர்ச்சிப் பெற்று பாரதிகண்ட புதுமைப் பெண்களாக மிளிர வேண்டும்’ எனவும் வாழ்த்திப் பேசினார்.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எ.வ. வே. கம்பன் சாதனை படைத்த மாணவிகளைப் பாராட்டினார்.



