திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் மதுராகுப்பம் பகுதிக்கு நீண்ட நாட்களாக சுமார் மூன்று கிலோ மீட்டர் மண் சாலையாக இருப்பதை தார் சாலை அமைக்க வேண்டு மென செங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 3 கிலோமீட்டர் தார் சாலை அமைப்பதற்கு ரூ. 92 லட்சம் நிதி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெரும்பாக்கம் ஏரிக்கரையில் இருந்து மதுராகுப்பம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், தவமணி முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன்,
அரசு ஒப்பந்ததாரர் கார்த்திக் மற்றும் மேற்பார்வையாளர் குமரன் உட்பட திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.



